ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இன்று(08) மத்திய வங்கியில் மனு கையளிக்கவுள்ளது..

ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இன்று(08) பிற்பகல் மத்திய வங்கியில் மனு ஒன்றை கையளிக்கவுள்ளது.

குறித்த அமைப்பிற்காக இன்று(08) காலை கொழும்பு ஹைட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டனர்.

ஈ.டீ.ஐ. நிறுவனத்தில் வைப்பிட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக இந்த அமைப்பு செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

அதேநேரம் ஈ.டீ.ஐ. நிறுவனத்தின் வைப்பாளர் இப்பங்கொட சந்தியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, அவர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் பதட்ட நிலை ஏற்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.