பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் இம்ரான்கான். அரசியல் கட்சி தலைவரான இவரது மனைவி ரேகம் கான்.
ரேகம்கான் கல்வி சான்றிதழ் போலியானது என்று புகார் எழுந்துள்ளது. ரேகம்கான் வடக்கு லின்டே கல்லூரியில் ஊடக இதழியலில் பட்டம் வாங்கி இருந்ததாக கூறி இருந்தார்.
ஆனால் அப்படிப்பட்ட படிப்பு அந்த கல்லூரியில் தொடங்கப்படவில்லை என்றும், மேலும் அந்த கல்லூரியில் ரேகம்கான் பெயர் பதிவு செய்யப்படவும் இல்லை என்றும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது கல்வி தகுதி குறித்து உண்மையை தெரிவிக்கவில்லை என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. இதை பாகிஸ்தான் ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்தன.
இந்த புகாரை தொடர்ந்து ரேகம்கான் விளக்கம் அளிக்கும் போது;
“ஊடக இதழியலில் நான் பட்டம் வாங்கியதாக ஒருபோதும் கூறவில்லை. கிரிம்ஸ்பி இன்ஸ்டிடியூட் மீடியா சென்டரில் ஊடக இதழியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.
எனது எதிரிகளின் தூண்டுதல் பேரில் தீய நோக்கத்துடனும், அடிப்படை ஆதாரமின்றியும் டெய்லி மெயில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது”
எனத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இணையதள பக்கத்தில் வடக்கு லிண்டே கல்வியியல் ஊடக இதழியலில் பட்டம் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்ததையும் திருத்தி உள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் ரேகம் திருமணத்தை முதலில் வெளியிட்டது டெய்லி மெயில் என்பதும் குறிப்பிடத்தக்கது
(riz)