UPDATE – பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது..

பொல்துவ, தியட்ட உயன சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்ப்புப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் கடும் வாகன நெரிசல்…

அனைத்து இலங்கை சமுர்த்தி மூத்த உத்தியோகர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் பேரணி காரணமாக பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றம் வரையிலான பாதையில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமுர்த்தி நிவாரணங்களை அதிகரித்தல், ஊழியர்களின் உரிமைகளை அமுல்படுத்தாமல், ஊக்குவிப்பு நடைமுறைகளை பிற்போடல் ஆகிய காரணங்களை முன்வைத்து குறித்த எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

அதேவேளை, இன்று(09) பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வருகின்றமையினால் குறித்த பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma