தசுன் ஷானகவின் வேகமான துடுப்பெடுத்தாட்டத்தினால் சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான நேற்றைய(08) நான்காவது ஒருநாள் போட்டியில் 300 ஓட்டங்களை தாண்ட முடிந்ததாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இது குறித்து திசர பெரேரா கருத்து தெரிவிக்கையில்;
“உண்மையில் நான் தசுன் வந்ததும் கூறியது, எமது சொட்ஸ் நிறுத்துவது நல்லதல்ல, ஏனென்றால் நாம் இருவரும் நேர்மறையாக துடுப்பெடுத்தாடுபவர்கள், அதனால் நாம் மூன்று ஓவர்களாக கணக்கிட்டு திட்டமிட்டோம், பின்னர் நாம் இலக்கு ஒன்றினை வைத்தோம் , எமது இலக்கு 280, நாம் இருவரும் நன்றாக விளையாடினோம், விசேடமாக, ஆதலால் 300 இலக்காக …
நான் பந்து வீச்சாளர், என்றாலும் எனது கனவு உலகக் கிண்ணத்தினை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதேயாகும். ஏனெனில் T/20 உலகக் கிண்ணத்தில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தினோம்..”