வித்தியா படுகொலை குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு…

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிரசன்ன ஜயவர்தன அகியோர் முன்னிலையில் இன்று(09) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 09 சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.