தாலிபான்களின் இரகசிய மூத்த தலைவரான முல்லா ஒமர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த தகவலில் ஆப்கான் பேச்சுவார்த்தைக்கு தான் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ரமழான் ஈத் கொண்டாட்டத்தில் அவர் விடுத்த செய்தியிலேயே மேலுள்ள தகவலினை குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்கானிஸ்தான் சமாதானப் பேச்சுவார்த்தையை பொறுப்புடனும், கண்காணிப்புடனும் முன்னெடுக்கும் விதத்தில் அரசியல் அலுவலகம் ஒன்றை திறப்பதற்கும் தாலிபான் தலைவர் முல்லா ஒமர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் புனித குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஏற்ப எனது கொள்கையும் சுதந்திரமானது எனத் தெரிவித்துள்ளார்.
(riz)