மல்வத்தை மஞ்சு கைது…

பாதாள உலக குழுவின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் மஞ்சுல சமிந்த எல்வல என்றழைக்கப்படும் மல்வத்தை மஞ்சு பொலிஸ் அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(09) மாலை கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் அதிரடிப்படையினால் பேலியகொட பிரதேசத்தில் வீடொன்றை பரிசோதனை செய்த வேளையே அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  குறித்த சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 840 மில்லி கிராம் ஹெரோயின், 9 மில்லி மீட்டர் ரக 5 இரவைகளும், 5 கடவுச்சீட்டுக்களும், 2 சாரதி அனுமதி பத்திரங்களும், 37 தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.