ரயில்வே பணிப்புறக்கணிப்பினை தொடர்ந்து புகையிரதங்கள் சில கொழும்பு கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்று(10) மாலையாகும் போது புகையிரத சேவையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமைாளர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தார்.
சிலாபம் நோக்கிய புகையிரத மார்க்கத்தில் இரண்டு புகையிரதங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒன்று தற்போது கொழும்புக்கு வந்திருப்பதாகவும், இதுதவிர கண்டி, மஹவ, ரம்புக்கனை, மாத்தறை, காலி, அநுராதபுரம் மற்றும் அவிஸ்ஸாவளை ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து ஒவ்வொரு புகையிரதங்கள் கொழும்புக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இன்று மாலை புகையிரதங்களின் அளவை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.