தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகம் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் திறப்பு…

தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26ம் திகதி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.