இவ்வருட பெல்லன்வில எஸல பெரஹரவின் இறுதி வீதி ஊர்வலம் இன்று(11) இரவு 08.00 மணிக்கு வலம் வர உள்ளதால் வாகனங்களுக்காக விஷேட போக்குவரத்து முறையொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பெரசர வீதி உலா வலம் வரும் காலத்தில் பொரலஸ்கமுவ சந்தி, பெல்லந்தர சந்தி, அண்டர்சன் வீதிக்கு அருகில் பெப்பிலியன சந்தி ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக வீதி மூடப்பட உள்ளது.
இதற்கு பதிலாக மகரகம, பிலியந்தலை பகுதியிலிருந்து தெஹிவளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கொஹுவல சந்திக்கு சென்று இடதுபக்கம் திரும்பி பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மகரகம, பொரலஸ்கமுவ நோக்கி வரும் வாகனங்கள், தெஹிவளை காலி வீதி ஊடாக வில்லியம்ஸ் சந்திக்கு அருகால் கொஹுவல நோக்கி சென்று வலது பக்கம் திரும்பி மகரகம, பொரலஸ்கமுவ நோக்கி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.