கடந்த 05 நாட்களாக தொடர்ந்த ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்திருந்தார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததன் காரணமாக பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தற்போது முதல் அனைத்து ரயில் சேவைகளையும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.