ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளன…

ரயில் கட்டணங்கள் 15 வீதத்தால் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரித்து அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்கத்தினர் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பணிப்புறக்கணிப்பினால் 64 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.