டிக்கோயா எட்லி தோட்ட மண் சரிவு அபாயம் காரணமாக 30 குடும்பங்களை குறித்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் டிக்கோய சலங்கந்த பிரதான வீதியின் வழியான போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் அட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நோர்வுட் பிரதேச சபையினர், வீதியின் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.