கடந்த புதன்கிழமை முதல் நேற்று(12) வரை இடம்பெற்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக, முன்கூட்டிய புகையிரத பயணச்சீட்டுகளை பெற்று பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போனவர்களுடைய பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.
இவர்களுக்குள் அதிகளவான வௌிநாட்டவர்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு தங்களது பயணச்சீட்டுக்களை வழங்கி பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.