வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் சிறைச் சாலையின் கூரை மேல் ஏறி மேற்கொண்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும்(14) தொடர்கின்றது.
இது குறித்து ஆராய்வதற்கு இன்று(14) அதிகாரியொருவரை சிறைச்சாலைக்கு அனுப்பவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, நேற்று(13) மாலை அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.