இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகள் புத்தளம் பிரதேச கடல் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாகவும் மருத்துவ கழிவு பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ள வேண்டும் எனவும் கடலோர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
புத்தளம் கடற்பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ள நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்பட்டவை என குறித்த அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் குமார தெரிவித்திருந்தார்.
இவற்றை அப்புறப்படுத்துவதில் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என்பதுடன், அவற்றை விரைவாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டர்னி பிரதீப் குமார மேலும் கூறினார்.