அனுராதபுர வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தம்…

அண்மையில் ரஜரட்ட பிரதேசத்தில் உள்ள ஒரேயொரு நரம்பிய விசேட வைத்தியர், பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த மாணவர்களுக்கு எதிராக பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

குறித்த வைத்தியரை தாக்கிய அனைத்து மாணவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன்னாள் நிறுத்துமாறும், அவ்வாறு இல்லையென்றால் அனுராதபுர பொது வைத்தியசாலை உள்ளிட்ட அனுராதபுர மாவட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.