ஆர்.பிரேமதாச மைதான நுழைவாயில் 4.30 மணியில் இருந்து திறந்து விடப்படும்…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று(14) மாலை 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், மைதான நுழைவாயில் அருகில் இடம்பெறும் சன நெருக்கடியினை தடுப்பதற்கு மாலை 04.30 மணியளவில் மைதான நுழைவாயில் திறக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.