இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வட மேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை தெரிவிக்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன், குருநாகல், மாத்தளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கி.மீ. வரை அதிகரித்து வீசுவதன் காரணத்தினால், கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, கடல்சார் தொழிலாளர்கள், கடல் நடவடிக்கையின்போது அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.