குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் கைது…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 01ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.