ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியினை நிறுவுவது தொடர்பிலான குழு அறிக்கை தயார் நிலையில்…

ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியினை நிறுவுவது தொடர்பிலான குழுவின் அறிக்கையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ம் திகதி கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக குறித்த கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியினை உடனடியாக நிறுவுவது தொடர்பிலும் அதன் பதவிகள் மற்றும் அமைப்பின் தகவல்கள் குறித்த குழுவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த அறிக்கை தொடர்பில் ஒன்றிணைந்த எதிர் கட்சியின் கட்சித் தலைவர்களால் கருத்துக்களும் முன்வைக்கப்பட உள்ளன.