5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்றுடன்(22) நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில், புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து பரீட்சார்த்திகளுக்கும், முதலாவது வினாப்பத்திரத்தின் 13ஆவது வினாவுக்கான புள்ளி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.