நீர் குழாய் வெடித்ததில் போக்குவரத்து பாதிப்பு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை…

பொரளை – காசல் வீதியில், நிலத்தடி நீர் குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தரமுல்ல மற்றும் பெலவத்த பகுதியில் இருந்து பொரளை நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.