மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்காக, பிரதமர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சி பிரநிதிகளின் இணக்கத்துடன் ஐவர் கொண்ட குழு, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் எக்காரணத்திற்காகவும் பிற்போடப்படக்கூடாது என்பது கரு ஜயசூரியவின் நிலைப்பாடாகும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.