வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி…

அமெரிக்காவில் நடைபெற்ற வீடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர் ஒருவர் விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று விடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தத்துடன், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவிக்கப்படுகிறது.