இளநரையினை நொடியில் நீக்கும் துளசி டிப்ஸ்…

துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கு உதவுகிறது.

ஆரஞ்ச் தோலும் துளசியும்:
தேவையானவை :- துளசி ஆரஞ்ச் தோல், சந்தன தூள்

செய்முறை: துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள் விரைவில் குணமாகும். அல்லது சந்தன தூள் மற்றும் துளசி ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் குணமாகும்

கலை இழந்த முகத்திற்கு:
துளசியை மருத்துவத்திற்கு எவ்வாறு உபயோகிக்கிறமோ அதே போல முக அழகிற்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை :- முதலில் 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். பின் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன் இருக்கும்.

இளநரையை குணமாக்க:
இளநரை உள்ளவர்கள் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தினால் இளநரையில் இருந்து விடுபடலாம்.

தேவையானவை :- நெல்லிக்காய் பவ்டர் துளசி ஆலிவ் எண்ணெய்
செய்முறை :- முதலில் 15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் கலந்து தலைக்கு தடவுங்கள். 2 மணி நேரத்திற்கு பிறகு தலையை வெண்ணீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம்.

முகத்தை சுத்தம் செய்ய:
முகத்தில் உள்ள அழுக்குகளை இந்த முட்டை மற்றும் துளசி ஆகிய இரண்டும் சேர்ந்து நீக்கி விடும். மேலும் முக துவாரங்களையும் விரிவடைய செய்து விடும்.

தேவையானவை :- முட்டை, துளசி
செய்முறை :- நன்கு 10 துளசி இலையை அரைத்து கொண்டு, அவற்றுடன் முட்டை வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். பிறகு இவை இரண்டையும் நன்றாக அடித்து கொண்டு, முகத்தில் தடவவும். இந்த அழகு குறிப்பு முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, பொலிவு பெற செய்யும். மேலும் தோலை இறுக செய்யும்.

பொடுகு தொல்லையில் விடுபட:
இதனை சரி செய்ய துளசி எண்ணெய், பாதம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொண்டு தலையின் அடி வேரில் தடவி தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சினை குணமாகும்.