பாகிஸ்தான் அணியின் மூத்த டெஸ்ட் வீரரான யூனிஸ்கானின் (171 ஆட்டமிழக்காது) அபார ஆட்டத்தால், அந்த அணி இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 377 ரன் என்ற வெற்றி இலக்கை எளிதாக எட்டி தொடரை கைப்பற்றியது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடியதால் யூனிஸ்கான் ஓய்வு பற்றி விமர்சனம் எழுந்தது. ஆனால், மூன்றாவது டெஸ்டில் சதம் அடித்து இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், 37 வயதாகும் யூனிஸ்கான் தனது ஓய்வு பற்றி கூறுகையில்;
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் சிறந்த அணியாக மாறும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான் இதுவரை சதம் அடித்தது கிடையாது. எனது ஓய்வுக்கு முன் அந்த இலக்கை எட்ட விரும்புகிறேன். நான் என்னுடைய பாணியில் சொல்கிறேன். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற என்னுடைய பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன்’’ என்றார்.
பாகிஸ்தான் கடந்த 1996-ம் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றது. ஆனால், இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் பாகிஸ்தான் ஒரு தொடரைக்கூட வென்றது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
30 சதம் அடித்துள்ள யூனிஸ்கான் சேசிங்கின்போது ஐந்து சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இன்னும் 19 ரன்கள் எடுத்தால், மியான்டட் எடுத்த 8832 ரன் என்ற சாதனையை முறியடிப்பார்.
(riz)