பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும், இன்று(27) திறக்கப்பட்டது.
குறித்த பீடமானது கடந்த, ஜூலை மாதம் 27 ஆம் திகதி மூடப்பட்டது. இதேவேளை, கடந்த 20 ஆம் திகதியன்று மூடப்பட்ட இன்னும் சில பீடங்களும், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இன்று(27) திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.