தற்போது இயங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் பல குறைபாடுகள் நிலவுவதாகவும், சில சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் வியாபார நோக்கில் இயங்கி வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எச். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிறுவர்களுக்கான பாதுகாப்பு நிலையங்களைத் தரமுடையதாக அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
அனைத்து சிறுவர் பாதுகாப்பு நிலையங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக எச். அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
முறையற்ற விதத்தில் நாடு முழுவதிலும் இயங்கும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.