கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படும் கழிவுகள், கடந்த ஒரு மாத காலமாக அப்புறப்படுத்தாமல் தேங்கிக் கிடப்பதாக, அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மனித உடற்பாகங்களின் கழிவுகள், பஞ்சுகள், கட்டுத்துணிகள், ஊசிகள், பிளேட் வகைகள் என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கழிவுகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வலிப்பு நோயாளர்கள் தங்கியிருக்கும் கட்டடத்தின் பின்புறத்தில் தேங்கி கிடப்பதால், வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளர்களும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெதிவத்த தெரிவித்துள்ளார்.
இந்தக் கழிவுகளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தி, எரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.