அம்மாவாகும் ரெஜினா கெசன்ட்ரா…!!

தொடர்ந்தும் பல வருடங்கள், பல தமிழ் படங்களில் நடித்தாலும் ரெஜினா கெசன்ட்ராவுக்கு சினிமா அதிகம் கைகொடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.

கடைசியாக அவர் நடித்த படம் மிஸ்டர் சந்திரமௌலி, இதில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக கடற்கரையில் எடுக்கப்பட்ட பாடல், படத்தின் ரிலீஸுக்கு முன்பே செம ஹிட் ஆனது.

இந்நிலையில் ரெஜினா அடுத்து ஒரு படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.