facebook,twitter மற்றும் google search இற்கு வருகிறது தடை..!!!

முகநூல்(facebook), டுவிட்டர் (twitter) போன்ற சமூக வலைத்தளங்களும், கூகிள் தேடுபொறியும் (google search) தமது அரசியல் பின்னணி தொடர்பில் பக்கச்சார்பாக செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ‘Trump News’ என்ற சொற்பதத்தை இட்டு தேடும் போது கூகிள் (google), மாறுபட்ட மற்றும் பக்கச்சார்பான விடயங்களை தனது தேடுபொறியில் (search) வௌிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வௌ்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப் “கூகிள் தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் பலரை பயன்படுத்திக் கொள்கிறது, அது கடுமையாக கவனிக்க வேண்டிய விடயம்” என்று குறிப்பிட்டார். இந்தநிலையில், ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பாக நிர்வாகம் ஆலோசித்து வருவதாக ட்ரம்பின் உதவியாளர் ஒரு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கூகிள் நிறுவனம் “நமது தேடு பொறி தளம் அரசியல் சார்பற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும், அதன் கொள்கைகளுக்கும் ஆதரவளிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது. அத்துடன், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தொடர்பாக கருத்து வௌியிட்டுள்ள ட்ரம்ப் “அந்த நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதிகபடியான முறைப்பாடுகள் வருகின்றன. அதனால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூற முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.