நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பல இடங்களிலும் ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின்போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.