30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்தார் கேத்ரின் தெரசா…

கேத்ரின் தெரசா தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரினை நடிக்க வைத்தோம் என இயக்குநர் சாய்சேகர் கூறியுள்ளார்.

மேலும், மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார். ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும் அந்த காட்சியிலும் எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்தார்.

அதேபோல், இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்தார்’ என்று கூறி இருக்கிறார்.