நாட்டின் சில பிரதேசங்களில் சீரான வானிலை…

நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்வேளைகளில் குறித்த் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்