பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றிரவு(03) மினுவாங்கொட – ஹீட்டியன பகுதியில் பொலிசார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 32 வயதான சந்தேக நபர், பாதாள உலக குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும், மெகசின் ஒன்றும், மூன்று இரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கி, அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான ஃப்ரடி என்ற பாதாள உலக குழு உறுப்பினரிடம் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் இன்று(04) மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.