தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய பாலத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை பரிசோதனை செய்த வேளை, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இரண்டு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வெலிகம – மற்றும் பேருவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது