ஊவா மாகாண அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு…

மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று(04) காலை 07 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் பி.திலகரத்ன கூறினார்.

குறித்த பணிப்புறக்கணிப்பில் தாதி உதவியாளர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.