அமலா பாலின் ஆடை ஃபர்ஸ்ட் லுக்… (photo)

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். ரொமான்டிக் காமெடிப் படமான இது, கடந்த வருடம் ரிலீஸானது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்குகிறார் ரத்னகுமார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு ‘ஆடை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமலா பால் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் இசையமைக்கிறார். வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டார்.

Image result for amala paul aadai first look

Image result for amala paul aadai first look