சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி வாய்ந்த இலங்கை வாழ் மக்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று(07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது சமூர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாத குறைந்த வருமானமுடைய 1,50,000 குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், இதன் முதற் கட்டமாக 1500 புதிய பயனாளிகளுக்கு சமூர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஆறு மாதங்களுக்குள் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.