அரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீ.சு.க 16 பேர் கொண்ட குழுவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை…

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவுக்கு எதிராக தீர்மானமிக்க ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும் எனவும், குறித்த கட்சியிடமிருந்து தாம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் செல்லும் போது கூட்டு எதிர்க் கட்சியின் ஜனபலய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தலைமையகத்தைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டு சென்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்று சேர்ப்பதாக கூறிக் கொண்டு அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது. கட்சியை இழிவுபடுத்துபவர்களுடன் இணைந்துள்ள இவர்களுக்கு எதிராக என்ன தீர்மானத்தை கட்சி எடுக்கப் போகின்றது எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.