கொழும்பு 02 பகுதியில் உள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல்..

சற்றுமுன்னர் ப்ரேப்ரூக் பிளேஸ் – கொழும்பு 02 பகுதியில் அமையப் பெற்றுள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயிணை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தீயணைப்பு படையினர் களத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அப்பிரதேசத்தில் பாரிய புகைமூட்டங்களை காணக்கூடியதாக உள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.