பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது…

நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் உட்பட 3593 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 6542 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி நாடு முழுவதும் இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.