போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த சாலிய பெரேரா கைது…

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த சாலிய பெரேரா என்ற இலங்கையர், தாய்லாந்தின் பாங்கொக் நகரில் வைத்து இன்டர்போல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸாரினால் இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபரை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.