இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 21 பேர் உயிரிழப்பு..

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து அதிக வளைவுகள் உடைய சாலையில் செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோசமான சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையுடைய இந்தோனேசியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் சர்வ சாதாரணமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.