ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு…

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.