ஹபராதுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 32 வயதான நபரொருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் வயிற்று பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் தற்போது மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதோடு, அவர் பொலிசாரால் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது