நேற்று(10) நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 149 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 161 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது..
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 123 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேநேரம், 130 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் குழு நேற்று பிற்பகல் கூடிய போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.