ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று(11) பிற்பகல் 12.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
ஆயுர்வேத திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற வைத்தியர்கள், தாதிமார் உட்பட ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குதற் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.