118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது…

காங்கேசன்துறை கடற்பரப்பில் 118 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூவரும் படகில் பொதி செய்யப்பட்ட 118 கஞ்சாவை கரைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது கடற்படையினர் இன்று (11) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கடற்படையினரால், காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.